Skip to main content

Completed Novels

Comments

Popular posts from this blog

என் காதல் ஸ்வரம் நீ - 1

  " அம்மா ப்ளீஸ் !! அழாத . எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க . ப்ளீஸ் மா !! நான் என்ன நிலாவுக்கா போறேன் ? இதோ இருக்கிற பெங்களூர்ல இருக்கிற காலேஜ்ஜுக்கு தானே மா போறேன் . என்ன ட்ரெயின்   ஏத்தி விட வரவேண்டாம்னு இதுக்கு தான் சொன்னேன் . அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா . ரொம்ப எம்பாரஸ்சிங்க்கா இருக்கு . நான் என்ன சின்ன பிள்ளையா ?" முதலில் தணிந்த குரலில் ஆரம்பித்து பின் லேசாக குரலுயர்த்தினேன் நான் . நான் .... ஸ்வரா சம்பத் .. திருவாளர் சம்பத் மற்றும் திருமதி மது சம்பத் தம்பதியின் ஒரே மகள் . பெங்களூரின் புகழ் பெற்ற ஐ ஐ எம்மில் பிசினஸ் மேனேஜ்மென்ட்     இரண்டாம் செமஸ்டர் படிப்பிற்காக கிளம்பும்போது தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும் . என்னுடைய பெரும்பான்மையான படிப்பு ஹாஸ்டலில் தான் . அப்பாவிற்கு வேலை காரணமாக பல ஊர்களுக்கு இடமாற்றம் அடிக்கடி வரும் என்பதால் நான் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு பழகிக்கொண்டேன் . இருந்தும் என்னவோ இது தான் முதல் முறை என்பது போல் அம்மா ட்ரெயின் ஏற்ற வந்தது மட்டுமின்றி அழவேறு செய்தத...